ஜிஹாதி படுகொலைகள் அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் நிர்வாகிகளாக இருந்த அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்காக விடியல் அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் கோவையில் கார் குண்டு வெடிப்பை, சிலிண்டர் வெடிப்பு என்ற அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களுக்கு தெரியவிடாமல் செய்தனர்.
ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை கார் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல் என்று உறுதியுடன் கூறினார். இதன் பின்னரே வழக்கு மாற்றி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேசிய புலனாய்வு முகமை சோதனைகளை தொடர்ந்து வருகிறது. எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. போன்ற அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேசிய புலனாய்வு முகமை சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பயங்கரவாதிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மதமாற்ற பிரச்சாரத்தை தட்டி கேட்ட திருபுவனத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக பல இடங்களில் என்.ஐ.ஏ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது திட்டமிடப்பட்ட ஜிஹாதிக் கொலை என்றும் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி மாநிலச் செயல்லாளர் திரு. வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட விதத்திலேயே, திருபுவனம் ராமலிங்கம் அவர்கள் படுகொலை நடைபெற்றுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அடையச் செய்கிறது.
இது போன்ற ஜிஹாதி படுகொலைகள் குறித்த ஆவணப் படத்தை இந்து முன்னணி கடந்த 2018 ம் ஆண்டே வெளியிட்டது. அதில் இது போன்ற கொடூர செயல்களைக் குறித்த விளிப்புனைவை மக்களிடையே ஏற்படுத்தியது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் எஸ்டிபிஐ, போன்ற பல்வேறு முகங்களில் தங்களது தேசவிரோத வேலைகளில் தொடர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகிறது.
இது இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியதாகும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டாலும் அதன் நிர்வாகிகள் பல்வேறு அமைப்புகளின் பின்னணியில் ஒளிந்து கொண்டு வேலை செய்து வருகின்றனர். எனவே தடை செய்யப்பட்ட அமைப்பில் பொறுப்பில் இருந்த அனைவரையும் விசாரித்து அவர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து அவர்கள் அனைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டால் மட்டுமே பயங்கரவாத செயல்களை முற்றிலுமாக தடுக்க முடியும். இல்லை என்றால் அவர்கள் பல்வேறு முகமூடிகளில் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வழக்கம்போல் தங்களுடைய பயங்கரவாத செயல்களை தொடரக்கூடும். அதே போன்று திண்டுக்கல்லில் அல்ஆசிக் என்ற பயங்கரவாதி திமுக பிரமுகரை வெட்டிப்படுகொலை செய்துள்ளார் இது போல் பயங்கரவாதிகளின் கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கு முன்பு ஜிஹாதி முறையில் நடைபெற்ற படுகொலைகள் அனைத்தையும் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் இத்தகையப் படுகொலைகளைச் செய்துவிட்டு இன்று வரை கைது செய்யப்படாமல் பயங்கரவாதிகள் வெளியே திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
உதாரணமாக திரு. தங்க முத்துக் கிருஷ்ணன் அவர்கள் வழக்கில் அபூபக்கர் சித்திக், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் டைலர் ராஜா, திருபுவனம் ராமலிங்கம் வழக்கில் 6 பேர், வெள்ளையப்பன் வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் போன்றவர்கள் கைது செய்யப்படவில்லை. ராமலிங்கம் கொலை வழக்கு குற்றவாளிகளை குறித்த துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்க என்.ஐ.ஏ. கூறியுள்ளது போன்று மற்ற வழக்குகளில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளைப் பற்றிய குறிப்பு தருபவர்களுக்கும் சன்மானம் வழங்க அறிவிக்க வேண்டும்.
அதேபோல ஜிஹாதி முறையில் கொல்லபட்டவர்களின் குடும்பத்தினருக்கும், பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்குவது போல நிவாரணம், சலுகைகள் வழங்க வேண்டும். இந்த நேரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடந்து துணிந்து மேற்கொண்டு வரும் என்.ஐ.ஏ. அமைப்புக்கு இந்து முன்னணி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் பொறுப்பில் இருந்த அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தால் மட்டுமே தமிழகத்தில் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த முடியும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-வ.தங்கவேல்