சந்தி சிரிக்கும் விடியல் ஆட்சியின் லட்சனம்! பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த தி.மு.க. நிர்வாகி.!

தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக வெல்டிங் பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று வாய்க்கு வந்த பொய் அனைத்தையும் பேசி ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் திமுகவினர் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. நாங்கள்தான் தமிழகத்தை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளோம் என்ற கர்வத்துடன் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது. இதில் அமைச்சர்களும் விதிவிலக்கல்ல.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் தரமறுத்து ஓட்டல் உரிமையாளர் முகத்தில் பாக்சிங் செய்த திமுகவினருக்காக, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் சென்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதை எல்லாம் பார்த்திருப்போம்.

இந்த நிலையில், திண்டிவனம் தேர்குணம் பகுதியை சேர்ந்தவர் வேணு. இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இதனை விரிவாக்கம் செய்வதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.40 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ரூ.15 லட்சம் கட்டிவிட்டதாகவும், மீதி பணத்தை கட்டுவதற்கு சிலகாலம் அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக நிர்வாகி பாஸ்கர், வேணுவை அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி அங்கு சென்ற அவரை காரில் கடத்தில் மாத்தூரில் ஒரு வீட்டில் 3 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதில் இருந்து தப்பிப்பதற்காக வேணு தனது செல்போன் மூலமாக மனைவிக்கு நடந்த சம்பவம் பற்றி தகவல் அளித்துள்ளார். தகவலை தொடர்ந்து போலீசாருடன் சென்று தனது கணவர் வேணுவை மீட்டுள்ளார். இது பற்றி வேணு அளித்த புகாரின் பேரில் பாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் மீது கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுகவினர் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் பல்வேறு குற்றச்சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனை அக்கட்சியின் தலைவராக இருக்கும் ஸ்டாலின் அடக்கி வைப்பதற்கு கூட தைரியம் இல்லாதவராக இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top