கேரளாவில் பெண் உட்பட துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள் பேரணி நடத்தியது மட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூர், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது.
அதன்படி கடந்த ஜூலை 24ம் தேதி மாலை கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு அருகே உள்ள வாளத்தோடு டவுன் பகுதியில் ஒரு பெண் உட்பட 5 மாவோயிஸ்டுகள் வந்தனர்.
அவர்களின் கைகளில் துப்பாக்கிகள் இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தனர். அங்கு வந்தவர்கள் துப்பாக்கிகளுடன் பேரணி நடத்தியுள்ளனர். அப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு நோட்டீசையும் கொடுத்துள்ளனர்.
அந்த நோட்டீசில் உலக வங்கியின் உத்தரவின் பேரில் நாட்டு மக்களுக்கு ரேஷன் பொருளை நிறுத்தும் பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு அரை மணி நேரத்திற்குப் பின்னர் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் டவுன் பகுதியில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிய நேரத்தில கேரள போலீஸ் என்ன செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் மாவோயிஸ்டுகள் சுதந்திரமாக நடமாடுகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது போன்றவர்களை சுதந்திரமாக நடமாட விடுவது ஆபத்தாக முடியும். எனவே உடனடியாக இது போன்றவர்களை கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.