தமிழகத்தில் பல கல்லூரிகளில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை மையமாக வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினருக்கு ஏற்பட்ட வன்முறை தற்போது கட்டுப்படுத்தபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசியல் செய்வதற்கு வழித்தெறியால் சிலர் கல்லூரிகளில் உள்ள மாணவர்களை பலிகடா ஆக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதாவது மறைமுகமாக போராட்டம் நடத்துவதற்கு தூண்டப்படுகின்றர். இதனால் மாணவர்களும் என்ன செய்கிறார்கள் என்றே அவர்களுக்கு தெரியாமல் போராட்டத்தில் இறங்கி விடுகின்றனர். அது போன்று செய்வது தவறானதாகும்.
இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதால், மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இதனால், காடு, மலைப்பகுதிகளில் பதுங்கியபடி, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி பகுதிகளை உள்ளடக்கிய கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு வனப்பகுதிகள் இருக்கும் முக்கோண காடு பகுதிகளில், தொடர் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இயக்கத்தின் கூட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ரகசியமாக நடைபெற்றது. மக்களுடன் ரகசியமாக இணைந்து போராட்டங்களை முன்னெடுப்பது, நகரங்களில் இயக்கத்தை வலுப்படுத்துவது என்று அதில் தீர்மானித்துள்ளனர்.
இதற்காக, மாணவர், பெண்கள் மற்றும் தொழிலாளர் என பல்வேறு பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்தி, மாவோயிஸட் தீவிரவாத இயக்கத்தை மறைமுகமாக வளர்க்க, களம் இறங்கியுள்ளனர். இந்த அமைப்புகளில் இணைந்து வேகமாக செயல்படும் இளைஞர்களை, ஆயுத பயிற்சிக்கு அழைத்து சென்று, மக்கள் விடுதலை படையில் இணைக்கின்றனர்.
தமிழகத்தில் சில ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டங்களின் பின்னணியில் இந்த இயக்கதான் இருந்துள்ளது. தற்போது மணிப்பூர் பிரச்னையை, கையில் எடுத்துள்ளனர். மணிப்பூர் கலவரத்துக்கு நியாயம் வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அரசு கலை கல்லூரிகள், சட்ட கல்லூரிகளில் தான் மணிப்பூர் பிரச்னைக்கு எதிரான போராட்டங்கள் அதிகமாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மணிப்பூரில் மாணவர் படையின் பங்களிப்பு:
தீவிரவாத இயக்கங்களின் பின்னணியில் இருக்கின்ற மாணவர் படை என்ற அமைப்பு, சமீபத்தில் மணிப்பூர் சென்று, அங்கிருக்கும் கூகி இன மக்களை சந்தித்து உதவிகளை செய்துவிட்டு பின்னர் தமிழகம் திரும்பியுள்ளது. அந்த படையில் உள்ள மாணவர்கள் அடுத்த கட்டமாக தமிழகத்தில் இருக்கும் குறிப்பிட்ட மத அமைப்புகளை சேர்ந்தோரை, மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் பலரை மணிப்பூருக்கு அழைத்து செல்லவும் திட்டம் போட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள உளவுத்துறை இயங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது.
மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம் போடுகின்ற அளவிற்கு அவர்களுக்கு இந்த விடியல் ஆட்சியில் சுதந்திரம் வழங்கியிருப்பது, பொதுமக்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது. இனிமேல் ஆவது மாணவர்கள் இது போன்றவர்களின் பேச்சை கேட்காமல் படிக்கின்ற வயதில் படிப்பில் கவனம் செலுத்தலாம்.