கோவில்களில் மெகா ஊழல் நடப்பதை கண்டித்து விடியல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம், அன்னூரில் இந்து முன்னணி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கோவில்களில் கிடைக்கின்ற வருமானம் தான் அரசின் குறிக்கோளாக உள்ளது. கோவில்களில் மெகா ஊழல் நடைபெறுகிறது. இதனை கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறோம். கோவில் நிலங்களை கோவிலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.
தற்போதைய நிலையில் புகழ்பெற்ற கோவில்களில் பிரேக் தரினசம் என்ற முறையில் அதிகமான கட்டணம் வசூல் செய்கின்றனர். தரிசன கட்டணம் வசூலிக்க கூடாது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் சிலைகளை சேதப்படுத்தியது பற்றி முழுமையான விசாரணை செய்யவில்லை. அதற்கான நடவடிக்கைளிலும் ஈடுபடவில்லை.
மேலும் வருகின்ற ஜூலை 30ம் தேதி அவிநாசியில் கோவில் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.