கோவை மாநகராட்சியில் எவ்வித உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சாக்கடை அடைப்பை நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போடப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றை சுத்தம் செய்வதற்கான கருவிகள் மற்றும் நவீன ரோபோக்களும் வாங்கப்பட்டுள்ளன.
அதனை வைத்து பாதாள சாக்கடை குழாயில் மேல் பகுதியில் போடப்பட்டுள்ள மூடியை மட்டும் திறந்து அடைப்பு ஏற்படும் சமயத்தில் சரி செய்துவிடலாம்.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சாக்கடையில் இருந்த அடைப்புகளை சரிசெய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சாக்கடை அடைப்பை சரி செய்வதற்கு உள்ளே இறங்கி அள்ளிய கொடுமை நடந்துள்ளது. திமுக அரசு தூய்மை பணியாளர்கள் உயிர்களில் விளையாடி வருகிறது.
இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்ய உரிய உபகரணங்களுடன் தான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் எப்படி அவர்களை உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்ய அனுமதித்தனர் என்பது தெரியவில்லை.
தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் உரிய உபகரணங்கள் கொடுத்து சுத்தம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.
ஆனால் சாலையில் ஒருவர் நடந்து சென்றால் கூட அதற்கு இந்த திராவிட மாடல்தான் அரசு என்று பெருமை பேசிக்கொள்வார்கள் உடன் பிறப்புகள். எந்த ஒரு மக்கள் நலப்பணியில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் ஸ்டாலினுக்கு எங்கே தூய்மை பணியாளர்களின் கஷ்டங்கள் தெரியவரும் என்ற கேள்வி எழுகிறது.