முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலை 29ம் தேதி வெளியிட்டார்.
புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி ‘என் மண், என் மக்கள்’ மோடியின் தமிழ் முழக்கம் என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த யாத்திரைப்பயணத்தை மேற்கொள்கிறார். மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் யாத்திரைப்பயணத்தை அண்ணாமலை மேற்கொள்ள உள்ளார்.
இந்த யாத்திரையின் தொடக்க விழா கடந்த ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையில் எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்று அண்ணாமலையின் யாத்திரைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய புத்தக வெளியீட்டு விழா ஜூலை 29ம் தேதி நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.