தென்காசி மாவட்டம், குற்றாலம், குற்றாலநாதர் கோவில் உள்ளது. அங்கு சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலோக பாத்திரங்களை பேரூராட்சி நிர்வாகத்தின் கடத்தி ஏலம் போட்டனர். இந்து சமயம் அறநிலையத்துறை அதை கண்டு கொள்ளாமல் பெயரளவில் சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையில் புகார் அளித்தனர்.
குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் திருவிழா நாட்களில் கட்டளை செய்வதற்காக 500 ஆண்டுகளுக்கு முன், சொக்கம்பட்டி ஜமீன் தரப்பை சேர்ந்தவர்கள், செம்பு, பித்தளை, வெண்கல பாத்திரங்கள் வழங்கியுள்ளனர்.
அதை கோவிலுக்கு சொந்தமான கல் மண்டபத்தில் பாதுகாத்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு முன் அரசாணைப்படி கல் மண்டபம் அறநிலையத்துறையிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது. கல் மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அறநிலையத்துறைக்கு பெற்றது. இருந்த போதிலும் கல் மண்டபம் குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்த பழமையான பாத்திரங்களை டிராக்டரில் கடத்திச் சென்று ஏலம் விட்டுள்ளனர். இதை ஹிந்து முன்னணி அமைப்பினர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இது பற்றி கோவில் நிர்வாகத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அறநிலையத்துறை கண்டும் காணாமல் இருந்துள்ளது. இதனை காவல் நிலையத்தில் கூட புகாராக கொடுக்கவில்லை.
இதன் பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் வேறு வழியின்றி அறநிலையத்துறை உதவி ஆணையர் கண்ணதாசன் தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கும் நோக்கத்தில் பெயரளவிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். ஆனாலும் பாத்திரங்கள் மீட்கப்படவில்லை.
பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த பழமை வாய்ந்த பாத்திரங்களை திருடிச்செல்வதை, விடியல் அரசு தடுத்து நிறுத்தாமல் அதை வேடிக்கை பார்த்துள்ளது என்றே தோன்றுகிறது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்தல், மற்றும் கோவில் சிலைகளை சிலர் தாக்குதல் நடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அரசு மவுனமாக உள்ளது.