பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் பற்றி யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, இரண்டு சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக பெரம்பலூரை சேர்ந்த வக்கீல் கவியரசு என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கடந்த ஜூலை 29ம் தேதி பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர். இந்த கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பத்ரியை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கு அனுமதி அளிக்ககோரி பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று, அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரியும் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மனுக்கள் மீதும் நீதிபதி கவிதா முன்பு இன்று (ஆகஸ்ட் 1) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ‘‘பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுக்க முகாந்திரம் எதுவும் இல்லை’’ எனக் கூறி காவல் துறையின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், நிபந்தனை ஜாமீனில் அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
வேண்டும் என்றே பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரையை மக்களிடம் இருந்து திசை திருப்ப இது போன்ற கைது நடவடிக்கையை விடியல் அரசு செய்து வருகிறது. ஆனால் இவர்களின் உண்மை முகமுடி மக்கள் முன்பாக தோலுக்கரிப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.