மழைக்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல் மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கியது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பதில் அளிக்கவும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதனை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்ட நிலையில், விவாதம் எப்போது நடத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்தனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆளும் மத்திய அரசு வெற்றி பெறும் என்றாலும், அந்த தீர்மானம் மீது மத்திய அமைச்சரவையின் தலைவர் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்பது நாடாளுமன்ற விதி.
இந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் வரும் 8ம் தேதி நடைபெறும் எனவும், விவாதத்திற்கு பிறகு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவாக 330 வாக்குகள் பதிவாகி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் தலைத்தெறிக்க ஓட்டம் எடுத்ததை பார்த்தோம்.
தற்போது மீண்டும் அதே நிலைதான் எதிர்க்கட்சிகளுக்கு நடக்கும். மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உள்ள நாடாளுமன்ற நேரத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வீணடித்து வருகிறது. எனவே வருகின்ற தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடங்களை புகட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-வ.தங்கவேல்