ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு போதைப்பழக்கத்தை பாகிஸ்தான் பரிசாக அளித்து வருகிறது. பஞ்சாப்பிலும் இதே வேலையைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது என்று ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறியிருக்கிறார்.

மேலும் அவர்,
ஜம்மு காஜ்மீரில் தீவிரவாதத்தையும், போதைப்பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. போதை மருந்து கடத்தல் தொடர்பாக என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையதாக 3,000க்கும் அதிகமானோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மிக முக்கிய குற்றவாளிகள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்க சிவில் நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே, ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் போதைப்பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே காவல் துறையின் அன்பான வேண்டுகோளாக உள்ளது. இவ்வாறு தில்பாக் சிங் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top