இந்தியா என்ற பெயரில் சிலர் ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கையாள்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை வகுத்துள்ளார். அந்தக் கூட்டணியை இனிமேல் ‘திமிர்க் கூட்டணி’ என சொல்ல வேண்டும் என்று தன்னை சந்தித்த கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை தொடரும் என கருத்துக்கணிப்புகள் வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க சில கட்சிகளுடன் ஒன்றிணைந்துள்ளது. அவர்கள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரை சூட்டிக்கொண்டனர். ஆனால் இதனை நாட்டு மக்களே ரசிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான தகவல்.
இந்தியாவை நேசிக்காதவர்களே தற்போது ஆட்சி அதிகாரத்திற்காக தங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துக்கொண்டனர் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு பிரதமர் மோடி தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து வருகின்றனர். அதன்படி பீஹாரை சேர்ந்த பாஜ மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மோடியை சந்தித்து உரையாடினர்.
அப்போது அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ‘இந்தியா’ கூட்டணி என அழைக்காதீர்கள். ‘திமிர்க் கூட்டணி’ என அழையுங்கள். எம்.பி.க்கள் அனைவரும் ஜாதி அரசியலை தாண்டி, அனைத்து தரப்பு மக்களுக்கான தலைவர்களாக மாற வேண்டும்.
நிலையான ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக நிதிஷ்குமார் உள்ளார். பீஹார் முதலமைச்சராக பதவியேற்க நிதிஷ்குமாருக்கு தகுதியில்லை. அவரிடம் குறைந்த எம்.எல்.ஏ.க்கள் தான் இருந்தனர். ஆனால் பாஜ அவரை முதலமைச்சராக்கியது. இது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் தியாகம்.
சிலர் தங்கள் சுயநலத்திற்காக கூட்டணியை விட்டு சென்றனர்.
அவர்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாம். அரசின் சாதனைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகள் என்று சொல்லிக் கொள்வதுடன், தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நிலையான அரசை அளிக்க முடியும் என மக்களிடம் விளக்கம் வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நம்ம கூட்டணியின் பங்களிப்பு பற்றி வீடியோக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக எம்.பி.க்கள் பகிர வேண்டும். குறிப்பாக எம்.பி.க்கள் மிக கவனமுடன் பேச வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.