விடியல் ஆட்சியின் அறநிலையத்துறை தூங்குகிறதா? திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விபத்து!

தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் கோபுர சுவர் இடிந்து விபத்துத்துக்குள்ளான சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி திருக்கோவில் ஆகும். தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் இக்கோவில் ஆசியாவின் மிகப்பெரிய பெருமாள் கோவில் ஆக உள்ளது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோவில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கோயிலாக திகழ்ந்து வருகிறது.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவில் புணரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னர் கோவிலின் பராமரிப்பு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதிலும் திமுக ஆட்சியில் சொல்லவே வேண்டியதில்லை. உண்டியல் வசூல் மற்றும் கோவில் சொத்துக்களின் வசூல் ஆகியவற்றை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் கோவில் பராமரிப்புக்காக எவ்வித பணிகளையும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தக் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் முதலாவது மற்றும் 2 ஆம் நிலை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதற்கான பணிகளில் விடியல் ஆட்சியின் அறநிலையத்துறை அலட்சியம் காட்டியதாக கூறப்பட்டு வந்த நிலையில், விரிசல் ஏற்பட்டு இருந்த ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் முதல் நிலை சுவர் இடிந்து விழுந்தது.

நள்ளிரவு சுமார் நள்ளிரவு 1.50 மணி அளவில் இந்த சுவர் இடிந்ததால் அங்கு எந்த விதமான உயிர்சேதங்களும் ஏற்படவில்லை. அதே நேரம் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தின் முதல் நிலை சுவர் இடிந்து விழுந்து இருப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இடிந்து விழுந்த கோபுரத்தை முழுமையாக சரி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top