நாடாளுமன்ற மக்களவையில் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்ற உள்ள நிலையில், பிரதமர் மோடி மக்களவைக்கு வந்த போது ‘‘பாரத் மாதா கி ஜெய்’’ என முழக்கமிட்டு, மேஜைகளை தட்டியும் பாஜக எம்.பி.க்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் பேசி வரும் நிலையில், அவையில் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.