தனது மகன் மற்றும் மருமகன் செய்துள்ள ரூ.30,000 கோடி முதலீடுகள் பற்றி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் வாய் திறக்கக்கூடாது என்பதற்காக 30 சவரன் தங்க கிரீடத்தை குருவாயூர் கோவிலுக்கு வழங்கியிருக்கலாம் என பாஜக நிர்வாகி செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி அவர் தனது ட்வீட்டர் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தன்னுடைய மகன் மற்றும் மருமகன் செய்துள்ள 30,000 கோடி முதலீடுகள் பற்றி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் வாய் திறக்க கூடாது என்பதற்கான 30 சவரன் வேண்டுதலா?.. இதெல்லாம் பகுத்தறிவு லிஸ்ட்ல வருமா?.. என குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று (ஆகஸ்ட் 10) காலை 11.30 மணிக்கு வந்தார். அவருடன் சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்களும் வந்திருந்தனர். அவர்களை தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் 32 சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடத்தை கோவில் சன்னதி முன் வைத்து, மூலவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்தனர். அதனுடன் சந்தனம் அரைக்கும் கருவி, கதளி பழம், நெய் உள்ளிட்டவையும் வழங்கி பூஜை செய்துள்ளனர்.
இந்த வேண்டுதல் தனது மகன் மற்றும் மருமகன் அமலாக்கத்துறையிடம் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்குதான் என தெரிந்தவர்கள் பேசிக்கொள்கின்றனர். ஆனால் குற்றம் செய்தவர்கள் ஒருபோதும் தண்டனையில் இருந்து தப்பிக்க மாட்டார்கள் என்பது கர்மா விதி.