சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகள் மற்றும் அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் எனவும், அதனை செல்பி எடுத்து https://harghartiranga.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்ற செய்யவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் நடைபெறும் ‘ஹர் கர் திரங்கா’ பிரசாரத்திலும் நாட்டின் சக்தி பிரதிபலிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு இந்தியனும் மூவர்ணக் கொடியுடன் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளனர். இன்னும் அதிகமாக தேசிய முன்னேற்றத்திற்கு உழைப்பதற்கு இது நம்மைத் தூண்டுகிறது.
எனவே ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் உள்ள அனைவரையும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி அதனை செல்பி எடுத்து https://harghartiranga.com/ என்ற இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.