ரயில்வேயில் பணியாற்றும் பெண் டிரைவர்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.
ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான பெண் இன்ஜின் டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நீண்ட தூரம் ரயில் இயக்கும் நேரத்தில் கழிவறை போக வேண்டும் என்றால், அடுத்த ரயில் நிலையம் வந்த பின்னர்தான் பயணிகள் பெட்டியில் உள்ள கழிவறையை பயன்படுத்த முடிகிறது. எனவே இது போன்ற சமயங்களில் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாவதாக புகார்கள் எழுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பலமுறை ரயில்வேத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பிரச்சினை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர், பெண் டிரைவர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கழிவறை வசதிகளுடன் கூடிய சிறப்பு அம்சங்களுடன் ரயில் என்ஜின்களை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்கான தீர்வு நிரந்தரமாக காணப்படும் என எதிர்பார்க்கலாம்.