என் பேத்திக்கு மருத்துவ சீட்.. நீட் தேர்வு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்த பால் வியாபாரி!

எனது பேத்தி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் தற்போது மருத்துவ சீட் கிடைத்துள்ளது என ஓசூரை சேர்ந்த பால் வியாபாரி கிருஷ்ணப்பா, நீட் தேர்வு கொண்டு வந்தவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வந்த பின்னர் தமிழகத்தில் சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்களும் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தேர்வை திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏழைக்குடும்பங்கள் நீட் தேர்வை கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது.

நீட் தேர்வு வருவதற்கு முன் வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கும் நிலை இருந்தது. மருத்துவ படிப்பு என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் நீட் வந்த பின்னர் ஏழைக்குடும்பத்தை சேர்ந்த பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர் தனது பேத்தி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் மருத்துவ சீட் கிடைத்துள்ளதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது: நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் முட்டாள் என்று சொல்ல முடியாது, இடியட் என்றும் சொல்ல முடியாது. நீட் தேர்வு கொண்டு வந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் எனது பேத்திக்கு மருத்துவம் படிக்கும் கனவு நிறைவேறியிருக்காது. கட்டாயம் நீட் தேர்வு இருக்கு வேண்டும். அப்போதுதான் திறமைச்சாலிகள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிப்பார்கள். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். 

பாரதி ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொறுப்பாளரும்  ஒரே நாடு இதழின்  நலம் விரும்பியுமான கவிஞர் சுபாஷ் அவர்களிடம் பால் விவயாபாரி  கிருஷ்ணன் மேற்படி தனது  கருத்துகளைப்  பகிர்ந்து கொண்டது  குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top