பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பான யுபிஐ எனப்படும் பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சிப் பெற்றிருப்பதாக ஜெர்மனி நாட்டின் டிஜிட்டல் துறை அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல மாற்றங்களை கொண்டு வந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அதில் ஒன்றான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தனர். ஆனால் தற்போதைய நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உபயோகிப்பவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். இது பிரதமர் மோடியின் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லலாம்.
வணிக வளாகம் சென்றாலும் சரி, காய்கரி வியாபாரி ஆனாலும் சரி, நடைபாதை வியாபாரிகள் ஆனாலும் சரி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை உபயோகிப்பதில் முதல் இடம் வகித்து வருகின்றனர். பணம் எடுத்துச்செல்லவில்லை என்றாலும் சரி கையில் போன் இருந்தாலே போதும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு டிஜிட்டல் மூலம் பணத்தை அனுப்பிவிட்டு வந்து விடலாம். இந்த சாதனையை பல வளர்ந்த நாடுகளே செய்ய முடியாமல் தவித்து வருகிறது. ஆனால் இந்தியா அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஜெர்மனி அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பங்கேற்றார். அப்போது இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சிப் பெற்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பார்த்து ஆச்சரியப்பட்டார். இதற்காக இந்தியாவை பாராட்டுவதாகவும் கூறினார். மத்திய அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் உடன் இரு நாட்டு உறவு முறை குறித்து விவாதித்தார். அப்போது இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) இந்தியாவில் நிதி பரிவர்த்தனைகளை துரிதப்படுத்தியுள்ளது. குறிப்பாக இச்சேவை 24 மணி நேரமும் இயங்குவதால் அனைவரும் பயனடைந்துள்ளனர் எனக்குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஜெர்மனி நாட்டின் தூதரக அதிகாரிகளுடன் அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் காய்கறி வாங்குவதற்காக சென்றிருந்தார். அங்கு அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது காய்கறி கடையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான கார்டு வைக்கப்பட்டிருந்தது. காய்கறி கடையில் கூட டிஜிட்டல் மூலம் பணப்பரிவர்த்தனையா என்று ஆச்சரியத்துடன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தூதரகத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கிய பின்னர் ஜெர்மனி அமைச்சர் தனது போன் மூலம் டிஜிட்டல் பேமெண்ட் வழியாக பணப்பரிவர்த்தனை செய்தார்.
இது பற்றி ஜெர்மனி அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சியில் டிஜிட்டல் கட்டண முறைக்கு முக்கிய இடம் உண்டு என்றார். இந்த பெருமை ஜெர்மனியையும் சென்றடையும் எனக் கூறினார்.
– வ.தங்கவேல்