தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கு, அந்நாட்டு அதிபர் கத்ரீனா என்.சகெல்லரோபவுலோவை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‛கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது. இதனை கிரீஸ் நாட்டின் அதிபர் வழங்கினார். இந்த விருது கிரீஸ் நாட்டின் 2வது உயரிய விருதாக கருதப்படுகிறது.
இதன் பின்னர் பின்னர் கிரீஸ் அதிபர் கத்ரீனா என்.சகெல்லரோபவுலோவை சந்தித்த பிரதமர் மோடி சந்திரயான்-3 வெற்றி குறித்து பகிர்ந்தார்.
இதனை தொடர்ந்து கிரீஸ் நாட்டு பிரதமர் ககிரியாகோஸ் மிட்சோடகிசை சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். அவரை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.