ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கடந்த 2009 முதல் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நிகழ்த்தி வந்த சொற்பொழிவுகள் சுருக்கப்பட்டு, 30 தலைப்புகள் கொண்ட சிறு நூல் ஒன்று நேற்று ( 25.08.2023 ) சென்னையில் வெளியிடப்பட்டது.
” மூன்றெழுத்து – சவால் – வெற்றி ” என்ற அந்த நூல் வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள
PRC நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.
ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வட தமிழக மாநில இணைச் செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர் அவர்கள் புத்தக அறிமுக உரை ஆற்றினார்கள்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) Sராஜேஸ்வரன் அவர்கள், தலைமை உரையாற்றினார்கள்.
திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகருமான கலைமாமணி RV உதயகுமார் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் புதுச்சேரி ஆரோவில் ஃபவுண்டேஷன் இயக்குனர்
சொர்ணாம்பிகா IPS அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் M பஞ்சநாதம் ஆகியோர் முதல் பிரதியை பெற்று கொண்டனர்.
ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வட தமிழக மாநில இணைச்செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும், இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை பற்றி தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு சரியான புரிதல் ஏற்படுத்தும் என்றும் நிகழ்ச்சியில் பேசிய முக்கிய விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.