பெரம்பலூர் மாவட்டத்தில் 6 தடுப்பணைகள் மட்டும் கட்டிவிட்டு 45 கட்டியதாக கணக்கு காட்டி 30 லட்சம் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலையாளப்பட்டி பஞ்சாயத்தில் 2019-20 நிதியாண்டில் 45 பாறாங்கல் தடுப்பணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மஞ்சனப்பாறை ஓடை, காந்திநகர் கூட்டுமருதை ஓடை மற்றும் கொட்டாரக்குன்று முருகன் கோவில் ஓடை ஆகிய மூன்று ஓடைகளில் தலா 15 தடுப்பணைகள் வீதம் மொத்தம் 45 தடுப்பணைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தடுப்பணை திட்டத்தின் மதிப்பு ரூ.77ஆயிரம் ரூபாய் வீதம் 45 தடுப்பணைகள் கட்ட ரூ.34 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் 45 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறி முழு தொகையும் தனியார் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாறாங்கல் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆய்வு நடத்தியதில் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டிவிட்டு 45 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறி அரசு நிதி 30 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பயன் படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஒப்பந்தக்காரர் மற்றும் இதற்கு ஒத்துழைத்த அதிகாரிகள் என ஏழு பேர் மீதுலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலிசார் தற்போது வழக்குபதிவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சியில் தொடர்ந்து பல ஊழல்கள் நடைபெற்று வருகிறது.
கிராம ஊராட்சி முதல் மாநகராட்சி வரையில் செய்யாத பணிகளை செய்ததாக காட்டி, பணம் சுருட்டுவது திமுக ஆட்சியில் பரவலாக நடந்து வருகிறது. பரவலான ஊழல் திராவிடம் மாடல் சாதனை!