நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்3 விண்கலத்தின் ‘விக்ரம் ரோவர்’ பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. பிரக்யான் ரோவரை, விக்ரம் லேண்டர் குழந்தை போல் கண்காணித்து வருகிறது என இஸ்ரோ கூறியுள்ளது.
நிலவில் தண்ணீர் மற்றும் காற்று உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்3 விண்கலத்தை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது. அதில் இருந்து பிரக்யான் லேண்டர் வெளியே வந்து தனது ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பிரக்யான் ரோவர் சாதனம் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை நிலவு தொடர்பான அனைத்து படங்களையும், விக்ரம் லேண்டரே அனுப்பி வந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பிரக்யான் ரோவரை, லேண்டர் விக்ரம் குழந்தை போல் கண்காணித்து வருகிறது. இது தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு இல்லையா? என இஸ்ரோ கூறியுள்ளது. சுட்டிக்குழந்தையை போன்று சுற்றிக்கொண்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.