எந்த நிலையிலும் வாசகர்களோடு தனக்கு உள்ள தொடர்பு நின்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, கொரோனா ஊரடங்கு தடை இருந்து வந்த நேரத்தில், ஆரம்பிக்கப்பட்ட ஒரே நாடு மாலை மின்னிதழ், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினால் அதன் பின்னும் தொடர்ந்து, நேற்றோடு தனது மூன்றாம் ஆண்டு பயணத்தை நிறைவு செய்து, இன்று நான்காம் ஆண்டு பயணத்தில் காலடி எடுத்து வைக்கிறது.
இந்த நல்ல தருணத்தில் வாசகர்கள், கட்டுரையாளர்கள், விளம்பரதாரர்கள், சமூக ஊடகங்களில் ஒரே நாடு மின்னிதழைப் பகிர்ந்து வரும் அன்பர்கள் என அனைவருக்கும் ஒரே நாடு தனது நன்றிகளை காணிக்கையாக்குகிறது. என்றென்றும் உங்கள் ஆதரவை கோருகிறது.
அனைவருக்கும் வாழ்த்துகள், வணக்கங்கள்.
– ஆசிரியர்.