“இந்து மதமும் சநாதனமும் ஒன்றல்ல” என்று சொல்லி தப்ப முடியாத வகையில்… தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனத்தின் 12ஆம் வகுப்பு “அறவியலும் இந்தியப் பண்பாடும்” புத்தகத்தின் 58ஆவது பக்கத்தில்…
“இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம், போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.” என்று வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசால்.
அதோடு, “சனாதன தருமம் என்றால், ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும். ” என்றும் தெரிவிக்கிறது!
‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பேசிய வீரமணி இதையே சொன்னதை கவனிக்கவும்.
இது பற்றி 12ம் வகுப்பு பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்திய சமயங்கள்:
இந்தியாவில் இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற சமயங்கள் தோன்றின. மேலும் இஸ்லாம், கிறித்துவம், ஜொராஸ்டிரியம் போன்ற சமயங்கள் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
நமது பண்பாட்டில் சமயங்கள் செல்வாக்குடன் இன்றளவும் விளங்குகின்றன. இந்தியா, பல சமயங்களின் தாயகமாகும். இவ்வாறு சமய வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனித்த அடையாளமாகும்.
இந்து சமயம்:
இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயமாகும். இஃது, உலகச் சமயங்களுள் தொன்மையான சமயமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றனர். பிற சமயங்களைப்போல் அல்லாது, இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று எவருமில்லை. பல்வேறு வகையான நம்பிக்கைகள், சடங்குகள், சமயநூல்கள் என்பனவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயமே, இந்து சமயமாகும்.
இந்து என்னும் சொல்லின் தோற்றம்:
கிரேக்கர், அராபியர், பாரசீகர் போன்ற அயல்நாட்டினர், பாரத நாட்டைச் சிந்து ஆற்றின் பெயரால் (ஸிந்து) ஹிந்து என்று அழைத்தனர். அது நாளடைவில் ஹிந்து என்று மாறியது. இது தமிழில் இந்து என்று வழங்கப்படுகிறது. இப்பெயர் இந்திய துணைக்கண்டமாகிய நிலப்பரப்பு மட்டுமின்றி, இங்கு வாழ்கின்ற மக்கள், பண்பாடு போன்றவற்றிற்கும் இவர்களது சமயத்திற்கும் பெயராகி உள்ளது.
இந்து என்னும் சொல்லின் பொருள்:
இந்து அல்லது ‘ஹிந்து’ என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்&ஹிம்சையில், து&துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ‘வேதசமயம்’ என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது.
மனிதனின் கலை உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கப்படுகிறது. அவனது ஆன்மிகப் பயணத்திற்கு உந்துதலாக அமைகிறது. மனிதர்களது அறிவுப் பசிக்குத் தத்துவக் கோட்பாடுகள் மூலம் உணவளிப்பது சமயமே ஆகும்.
இந்து சமயத்தின் அடிப்படை:
இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு கடவுளை அடைவதாகும். எல்லாவற்றையும்விட இவர் மேலானவராக இருப்பதால், கடவுளைப் பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது. கடவுள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறார். படைக்கும்போது அவர் பிரம்மன் என்றும், அழிக்கும்போது சிவன் என்றும் அறியப்படுகிறார். இந்த வெவ்வேறு மூன்று தொழில்களைச் செய்யும் பரம்பொருளையே மும்மூர்த்திகள் என்று கூறுகின்றனர். ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை இந்து சமயத்தின் அடிப்படை கருத்துக்கள் ஆகும்.
ஆன்மா (உயிர்)
ஆன்மா உடலுடன் வாழும்போது ஜீவாத்மா என்றழைக்கப்படுகிறது. அஃது அழிவில்லாதது. உடலுக்கு அழிவு உண்டு; ஆன்மாவிற்கு அழிவில்லை என்று இந்து சமயம் கூறுகிறது.
சனாதனம் வேறு இந்து மதம் வேறு என்று கம்பு சுற்றுபவர்கள், விடியல அரசின் 12 வது பாடப்புத்தகத்தை யாது படித்திருக்க வேண்டும்… உதயநிதி எப்படி பாஸ் செய்து இருப்பார் என்று நமக்கு தெரியாதா என்று கலாய்கின்றனர் நெட்டிசன்கள்.