உலக அளவில் அதிகளவு அங்கீகாரம் பெற்ற தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு பாஜக தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றார். அதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பல அவப்பெயர்களை இந்தியாவுக்கு விட்டு சென்றது. குறிப்பாக ஊழல் என்றால் இந்தியாதான் முதல் இடத்தில் இருந்தது. இதனை முதலில் ஒழித்துக்கட்டி பிரதமர் நரேந்திர மோடி சாதனை படைத்தார். உலகளவில் இந்தியா மீது இருந்த களங்கம் நீங்கியது. பற்பல பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகள் செய்ய காத்துக் கொண்டிருக்கின்றன. தொழில் செய்வதற்கு உகந்த நாடாக நமது பாரத தேசம் தற்போது விளங்கி வருகிறது.
இந்த நிலையில், உலக அளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவர்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வரும் வட அமெரிக்க நிறுவனம் ஒன்று தற்போது வெளியிட்டு உள்ள பட்டியலில் உலக அளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார், பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை 76 சதவீதம் பேர் அங்கீகரித்து உள்ளனர், எனச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அலங்கரித்து வருகிறார். இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தேசிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் அனில் பலூனி தனது எக்ஸ் தளத்தில், ‘ஜி-20 உச்சி மாநாட்டின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடி அதிக உலகளாவிய ஒப்புதல் மதிப்பீடுகளைக் கொண்ட தலைவராக இருக்கிறார்’ என குறிப்பிட்டு இருந்தார்.