திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் திமுக தூண்டுதலின் பேரில் சனாதன தர்மம் ஒழிப்பு கருத்தரங்கை நடத்த இருந்த சீப்பு செந்திலிடம் போலீசார் ” ரத்துக் கடிதம் ” எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இன்று (செப்டம்பர் 16) வள்ளியூரில் தான் சனாதன தர்மம் ஒழிப்பு கருத்தரங்கு நடத்தப் போவதாக அறிவித்திருந்த சீப்பு செந்திலுக்கு இந்துத்துவ இயக்கங்களில் இடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதில் சீப்பு செந்தில் மற்றும் திகவை சேர்ந்த மதுவதனி பங்கேற்பதாக இருந்தது.
அதிலும் சீப்பு செந்தில் வள்ளியூரை சேர்ந்தவர் என்பதாலும், சபாநாயகர் அப்பாவு ஊர் என்பதாலும் சனாதன தர்மம் ஒழிப்பு கருத்தரங்கை எளிதாக நடத்திவிடலாம் என சீப்பு செந்தில் நினைத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று நடக்க இருந்த சனாதன தர்மம் ஒழிப்பு கருத்தரங்கிற்கு இந்துத்துவ இயக்கங்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கலக்கமடைந்த போலீசார் சீப்பு செந்திலை இன்று அதிகாலை காவல் நிலையம் அழைத்து சனாதன ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெறாது என்று எழுதி வாங்கி அனுப்பியுள்ளனர்.
தெரியாத்தனமாக ஒரு மாநாடு நடத்தினது போதும், இனி நடத்த வேண்டாம் என திமுக அரசு முடிவு செய்துவிட்டது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இது ஒன்றுபட்ட இந்து சக்திக்கு கிடைத்து வெற்றி என்கிறார்கள் இந்திய இயக்கப் பொறுப்பாளர்கள்.