திமுக ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது: பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்!

திமுக ஆட்சியில் சமீப காலமாக குடிநீரில் மனித மலத்தை கலக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பனைகுளம் அரசு பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பனை குளம் என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இன்று காலை துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தார். அப்பொழுது அந்தத் தொட்டியில் மலம் கலந்து உள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்தத் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது.

இது பற்றி தலைமை ஆசிரியர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். தடய அறிவியல் துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

மனித மலம் கலக்கப்பட்டதா? அல்லது விலங்குகளின் மலம் கலக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் சமீபகாலமாக அரசுப் பள்ளிகள் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளில் மனித மலம் கலக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

ஏற்கனவே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட பிரச்சனையில் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து திருத்தணி அரசுப்பள்ளியின் கேட் பூட்டின் மீது மனித மலம் பூசப்பட்டிருந்தது. அதனை செய்தவர்களும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. தற்போது பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ளது. இது போன்று தொடர்ந்து திமுக ஆட்சியில் மலம் கலக்கும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இது போன்ற கொடுமையான செயல்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது தொடருவதற்கு அனுமதிக்குமா என்ற கேள்வி அனைத்து பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top