உசிலம்பட்டியில் பயணிகளை ஏற்றிச்சென்ற அரசு பேருந்தின் முன்பகுதியில் ஓட்டுநர் சீட்டுக்கு அடியில் இருந்த டயர் கழண்டு பேருந்துக்கு முன்னதாக ஓடி விபத்துக்குள்ளானது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து பேரையூருக்குச் சென்ற அரசு போக்குவரத்துக்கழக நகர பேருந்தை ஓட்டுநர் மகேஷ் ஓட்டிச்சென்றார். பேருந்து நல்லுத்தேவன்பட்டி கண்மாய்கரையில் சென்ற போது திடீரென்று ஓட்டுநர் சீட்டுக்கு கீழ் உள்ள முன்பக்க டயர் தனியாக கழண்டு பேருந்தின் முன்பாக ஓடியது.
டயர் இல்லாமல் இழுத்தபடி சுமார் 15 அடி தூரம் வரை சென்று பேருந்து நின்றது. பயணிகள் அனைவரும் அலறித் துடித்தனர். நல்லவேலை பேருந்து வேறு பக்கம் திரும்பாமல் நேராகச் சென்றதால் பக்கவாட்டில் உள்ள பள்ளத்திற்குள் கவிழாமலும், எதிரே வாகனங்கள் எதுவும் வராததாலும் பெரிய விபத்தில் மாட்டாமலும் தப்பியது.
பேருந்தில் இருந்த நடத்துனர் பாண்டியராஜன் மற்றும் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பெரிய அளவிளான காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த பேருந்து விபத்து பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விடியா ஆட்சியின் லட்சனம் இதுதான் என பலரும் கிண்டல் செய்வதை காணமுடிகிறது. திமுக ஆட்சியில் பேருந்துகளை முறையாக பராமரிக்காமல் வெறும் முன்பக்கம், மற்றும் பின்பக்கம் பெயிண்டை அடித்துவிட்டு இதுதான் மகளிருக்கான இலவச பேருந்து என்று அறிமுகப்படுத்தியதை யாரும் மறக்க மாட்டார்கள். அரசு பேருந்துகளில் பாதுகாப்பில்லாத பயணமே தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது.