நமது பாரதத்தின் குடிமக்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ்களைக் கொண்டு ட்ரோன் பைலட் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. விவசாயப் பணிகள் முதல் எல்லைப் பாதுகாப்பை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் ட்ரோன் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனை இயக்குவதற்கு கட்டாயம் பைலட் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில், ட்ரோன் பைலட்களுக்கான புதிய ட்ரோன் விதிகள் திருத்தம் 2023-ஐ மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சட்ட திருத்தத்திற்கு பிறகு, ட்ரோன் பைலட் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க இனி பாஸ்போர்ட் கட்டாயமில்லை. ரிமோட் பைலட் சான்றிதழுக்கு விண்ணப்பக்க, அரசங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள சான்றிதழ்களான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது குறித்து மத்திய அமைச்சகம் கூறியதாவது, இந்த புதிய சட்டத்திருத்தம், நாடு முழுவதும் ட்ரோன் பயன்பாடுகளை மேலும் விரிவாக்குவதல், ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்குதலை நோக்கமாக கொண்டது.
மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய ட்ரோன் மையமாக மாற்றுவதே இலக்காகும் என்று அமைச்சகம் கூறியது.