திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை மர்ம நபர்கள்
கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடியல் அரசின் பாதுகாப்பு லட்சணம் கேள்விக்குறியாகவே உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி முத்துராஜ், ரதி. இவர்கள் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து தரிசனத்துக்காக வந்துள்ளனர். பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்துள்ளனர். அப்போது அவர்களுடன் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் எடுத்து வந்துள்ளனர். கோயில் வளாகத்திலுள்ள சுகாதார மண்டபத்தில் துணி துவைக்க ரதியும், கடைக்கு முத்துராஜும் சென்றதை பயன்படுத்தி மர்மப் பெண் ஒருவர், குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.
குழந்தைகளை திருடும் நபர்கள் யார் யார் ? கோயில் நிர்வாகம் அவர்களை எப்படி கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கிறது ?
என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கோயில் வளாகத்தில், பக்தர்கள் இங்கு வரலாம் இங்கு வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கும் நிர்வாகம், பக்தர்கள் தங்குமிடங்களில், பாதுகாப்பை பலப்படுத்தாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்புகின்றனர்..