அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் நோக்கர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை
தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் விரைவில் நிறைவடைவதால், அந்தந்த மாநிலங்களில் நடைபெற வேண்டிய 2023க்கான சட்டசபை தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
இன்று (அக்டோபர் 9) செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இதனை வெளியிட்டார். இம்முறை நக்சல் பாதித்த சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாகவும் பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மிசோரம் நவம்பர் 7
சத்தீஸ்கர் (2 கட்டங்கள்) நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17
மத்திய பிரதேசம் நவம்பர் 23
ராஜஸ்தான் நவம்பர் 23
தெலுங்கானா நவம்பர் 30
அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.