ஹமாஸ் பயங்கரவாதிகளை தும்சம் செய்யும் இஸ்ரேல் ராணுவம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த மோதலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளை கொன்றுக் குவிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சபதம் ஏற்று களம் இறங்கியுள்ளது. 

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். எல்லையை கடந்து இஸ்ரேல் பகுதியில் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கையில் உள்ள துப்பாக்கிகளை கொண்டு பொதுமக்களை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர். இதில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள், ராணுவ வீரர்கள் பலரை ஹமாஸ் பயங்கரவாதிகளை கடத்திச்சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப்படை தனது போர் விமானங்கள் மூலம் பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இதில் பல நூற்றுக்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய இந்தத் தாக்குதல் இஸ்ரேல் நாட்டின் எதிர்த்தரப்பு தாக்குதலால், இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது.

சுமார் 22 லட்சம் மக்கள் வசித்து வரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை அரசியல் ரீதியாக இந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது. இந்த பகுதியின் பரப்பளவு 365 சதுர கிலோ மீட்டர். கடந்த 2007-ல் பாலஸ்தீன ஜனாதிபதி மொகமது அப்பாஸுக்கு விசுவாசமான ஃபதா படைகளுக்கு எதிரான போருக்குப் பிறகு காசா, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 1987-ல் ஷேக் அகமது யாசின் மற்றும் அப்துல் அஸிஸ் ஆகியோர் இணைந்து காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை தொடங்கினர். இஸ்ரேலுக்கு எதிராக இந்த பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஆக்கிரமிக்கப்பட்டதாக தான் நினைக்கும் பாலஸ்தீனப் பிராந்தியங்களில் தாக்குதல் நடத்துவது, இஸ்ரேலிலும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பாவி இஸ்ரேலிய  மக்களை குறிவைத்து தாக்குதல் போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களில் ஈடுபடுவது ஹமாஸின் வாடிக்கை. அதன் காரணமாக இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் நாடுகள் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடுகின்றனர். 

மாறாக, அமெரிக்க கொள்கைகளை எதிர்க்கும் ஈரான், சிரியா, லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராளிக் குழு போன்றவை ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. அதே போல காசாவில் இயங்கி வரும் மற்றொரு குழுவான இஸ்லாமிக் ஜிஹாத் குழுவின் ஆதரவும் ஹமாஸ் அமைப்புக்கு உள்ளது.

கடந்த பத்து ஆண்டு காலமாக ‘ பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அட்டூழியங்களுக்கு’  பதிலடி கொடுக்கும் வகையில் சனிக்கிழமை அன்று தாக்குதலை மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இதில் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் வசித்து வரும் இஸ்ரேல் மக்கள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹமாஸ் இயக்கம் நடத்தி இந்தத் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாகவே உலக நாடுகள் பார்க்கின்றன. எனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவும் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

கண்ணை மூடிக்கொண்டு பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் முந்தைய இந்திய அரசுகளின் செயல்பாட்டுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, உடனடியாக இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்த நரேந்திர மோடியின் அறிவிப்பை உலக நாடுகள் ஆச்சரியமாக பார்க்கின்றன. இஸ்ரேலின் நட்பு நாடுகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்று இருக்கின்றன. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top