விடியா அரசை கண்டித்து குடும்பநல அறுவை சிகிச்சையை புறக்கணிக்க மருத்துவர்கள் முடிவு!

பல்வேறு வகையிலான கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் போராட்டம் நடத்தும் அரசு மருத்துவர்கள் இன்று (அக்டோபர் 12) முதல் குடும்பநல அறுவை சிகிச்சையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் என்பவர் அத்துமீறி நுழைந்து மருத்துவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டுள்ளார். அது மட்டுமின்றி மருத்துவப் பணியாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் அரசு மருத்துவர்கள் அவர்மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் செயலுக்காக உடனடியாக அவரை பணிநீக்கம் செய்யவும் மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்கவும், மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. மதுரையில் நேற்று (அக்டோபர் 11) மாநில தலைவர் செந்தில் தலைமையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு மருத்துவர்கள் கூறியதாவது: மக்கள் நல்வாழ்வுத் துறையில் மகப்பேறு மருத்துவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உள்ளது. இதனை உயர்த்த வேண்டும். மகப்பேறு இறப்பு சிகிச்சை தணிக்கையை மாநில அளவில் மூத்த மருத்துவர்கள் உயர்மட்ட குழுவை கொண்டு நடத்த வேண்டும். நிர்வாகம் தொடர்பான தணிக்கை மட்டுமே ஆட்சியர், இயக்குனர்களை வைத்து நடத்த வேண்டும்.

எனவே நடைமுறையில் உள்ள ஆறுவித தணிக்கையை மாற்றி ஒரே தணிக்கை மட்டுமே நடத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதற்கு தீர்வு காணும் வரை மதுரை அரசு மருத்துவமனை பயோமெட்ரி வருகை பதிவில் பதிவு செய்யப்படமாட்டாது. தணிக்கை, ஆய்வு, காப்பீடு கூட்டங்களை புறக்கணிப்பது, அனைத்து வித முகாம்களையும் புறக்கணிப்பது, வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறுவது, இன்று (அக்டோபர் 12) தற்செயல் விடுப்பு எடுத்து எதிர்ப்பை தெரிவிப்பதுடன் நோயாளிகளை பாதிக்காமல் அவர்களுக்கான சேவையை தொடர்வது, அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் குடும்பநல அறுவை சிகிச்சையை புறக்கணிப்பது அக்டோபர் 16 முதல் அவசரமில்லா அறுவை சிகிச்சைகளை நிறுத்துவது எனவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர். அதன் பின்பும் தீர்வு கிடைக்காவிடில், மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும் என தீர்மானித்துள்ளனர்.

இது போன்று அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கருணாநிதிக்காக ஊர், ஊரா ஓட்டப்பந்தயம் நடத்தி வருகிறார். பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். தற்போது மருத்துவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் அரசு மருத்துவமனையை நம்பியுள்ள மக்களின் நிலை என்னாவது ? எனவே உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றி பொதுமக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top