ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மிரட்டல் பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு சென்னை பேராயர் குணசேகரன் சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னிமலை முருகன் கோவில் கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய மிகவும் புன்னிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சென்னிமலை, முருங்கத்தொழுவு பஞ்சாயத்து கத்தக்கொடிகாட்டில் ஜான் பீட்டர் என்பவரின் வீட்டில் கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னிமலை மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என ஒலி பெருக்கி வாயிலாக தெரிவித்தார். இந்த மிரட்டல் பேச்சுக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதற்கு கண்டனம் தெரிவிக்கின்ற வகையில் சென்னிமலையை அதிரும் அளவிற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஆளும் திமுக மிரண்டு போய் உள்ளது.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பேராயர் குணசேகரன் சாமுவேல், சென்னிமலை கோவில் விவகாரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது:
கிறிற்துவர்கள் சென்னிமலை சென்று அங்கு பிரார்த்தனை செய்தது கண்டனத்துக்குரியது. அவர்கள் அது போன்று செய்திருக்கக் கூடாது. அது மிகவும் தவறான காரியம். அதை வன்மையாக கண்டிக்கிறேன். மற்றவர்கள் வழிபடும் இடத்திற்கு சென்று தான் நீங்கள் இயேசுவை பிரார்த்தனை செய்ய வேண்டும் என, பைபிளில் சொல்லப்படவில்லை. இது வேண்டும் என்றே செய்யப்பட்டதாகக் கருதுகிறேன். அது போன்றவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களுக்குத் துணை போவதாக அர்த்தம்.
இவர்கள் போன்று சிலர் செய்யும் விஷயத்திற்காக ஒட்டுமொத்த கிறிஸ்துவர்கள் பெயரிலும் தவறான எண்ணம் ஏற்படுகிறது. இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள். இந்தச் செயலை கிறிஸ்துவ முன்னணி என்ற அமைப்பினர் செய்ததாக தெரிவிக்கின்றனர். கிறிஸ்துவ முன்னணி என்பது எங்களுக்கே தெரியாத ஒரு அமைப்பு.
ஒரு சிலர் சேர்ந்து கொண்டு கிறிஸ்துவ முன்னணி என்று சொல்லிக் கொண்டு பிற மதத்தினருக்கு துன்புறுத்துதலையும் மன உளைச்சலையும் கொடுப்பதை கண்டிக்கிறேன். அவர்களை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னணியில் யாரோ உதவி செய்கின்றனர்.
இதற்காக ஹிந்து மத சகோதர, சகோதர்களிடம் என் மனம் திறந்த மன்னிப்பை கேட்டு கொள்கிறேன். தவறான சம்பவம் நடந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கிறிஸ்தவர்களினால் ஏற்பட்ட சம்பவத்துக்கு மன்னிப்பு கோருகிறேன், தயவு செய்து மன்னித்து விடுங்கள். நமக்குள் எந்த ஒரு பகையும் வேண்டாம். ஒற்றுமையாக இருப்போம். ஹிந்து முன்னணியினர் தயவு செய்து மன்னித்து விடுங்கள். இதை கிறிஸ்துவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கிறிஸ்தவ பேராயர் ஒருவரை இறங்கி வந்து மன்னிப்பு கேட்ட நிலையிலும் திமுக அரசு இன்றுவரை கிறிஸ்துவ முன்னணி என்ற அமைப்பின் மீது தக்க நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக ஹிந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து வருகிறது. விரைவில் திமுக விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று சொல்கிறார்கள் இந்து அமைப்பினர்.