இந்து பண்டிகையான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையின்போது அரசு அலுவலகங்களில் சாமி படங்களுக்கு அனுமதி இல்லை என திமுக அரசின் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், பூஜையின் போது மஞ்சள் குங்குமத்திற்கு தடை என
கர்நாடக காங்கிரஸ் அரசும் அறிவிப்பு வெளியிட்டிருப்பது இந்துகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து மத வழிபாட்டுத்தலங்கள் மீதும் பண்டிகைகள் மீதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக சில கோயில்கள் கோயில்களை இடித்து தரை மட்டமாக்கப் பட்டது. அரசு கட்டிடங்களின் துவக்கத்தில் பூமி பூஜை காலம், காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் திமுக அரசு இது போன்ற பூஜைகளில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும் வாய்மொழி உத்தரவுவாக பிற்பிக்கப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அரசு மருத்துவமனையில் ஆயுத பூஜைக்கு இடமில்லை எனவும் ஒரு மதத்தினுடைய சாமி படங்கள் கட்டாயம் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு, இது மாவட்ட ஆட்சியர் ஒப்புதலால் அனுப்பப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். . இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் கர்நாடக காங்கிரஸ் அரசும் இதே பாணியை கடைப்பிடித்துள்ளது. ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையின்போது மஞ்சள் குங்குமம், உபயோகிக்க கூடாது என்று அரசாணையை வெளியிட்டுள்ளது. இது கர்நாடகாவில் உள்ள இந்துக்களை கொதிப்படைய செய்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான மனநிலையிலேயே செயல்பட்டு வருகிறார்.
இது தொடர்பாக கர்நாடகா பா.ஜ.க., எம்.பி.யும், தேசிய இளைஞர் அணிதலைவருமான தேஜஸ்வி ர்யா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
2 மாநிலங்கள், இரண்டு அரசாணை.. ஒரு இலக்கு -ஆயுத பூஜை..
இ.ண்.டி. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நூறு வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர்கள் இந்த மண்ணின் பூர்வீக கலாச்சாரத்தின் மீதான வெறுப்பிலும் அவமதிப்பிலும் ஒன்றுபட்டுள்ளனர்.
ஆயுதபூஜையின் போது அரசு அலுவலகங்களில் பூக்கள், குங்குமம், மஞ்சள் மற்றும் பிற பூஜைக்கு தேவையான பொருட்களை பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசும் சில தடைகளை விதித்து தமிழகத்தில் திமுக அரசும், இன்று அரசாணை பிறப்பித்துள்ளன.
பல ஆண்டுகளாக, தென்னிந்தியாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஊழியர்களும் ஆயுதபூஜையை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள். இந்த முக்கியமான கலாச்சாரத்தின் மீது இ.ண்.டி. கூட்டணி இப்போது தனது இலக்கை நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
இ.ண்.டி. கூட்டணியில் இருப்பவர்களக்கு பின்வரும் குணங்கள் இருக்க வேண்டும்.
1. ஊழல் செய்
2. 2ஜி, 3ஜி, 4ஜி வம்சமாக இருக்க வேண்டும்
3. முகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.
4. சனாதன தர்மத்தை வேறறுக்க வேண்டும்
இதுதான் அவர்களைப் பிணைக்கும் பொதுவான கயிறு. நமது தேசத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்ததற்காக நம் நாட்டு மக்கள் அவர்களுக்குத் தோல்வியைக் கொடுப்பார்கள்! இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.