காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவு பெருகிறது. இந்திய அரசும் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தெரிவித்திருப்பதோடு, கமாஸ் பயங்கரவாதத்திற்கு எதிர்த்து தெரிவித்திருக்கிறது. ஆனாலும் இங்கு சில காட்சிகளும் இயக்கங்களும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி இருப்பது தமிழக மக்களுக்கு கவலை அளித்திருக்கிறது.
இந்த வகையில் கடந்த அக்டோபர் 24ம் தேதி காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதவாக கோவை உக்கடம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தில் ஹமாஸ் பயங்கரவாத கொடியை சிலர் பறக்கவிட்டனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் பின்னரே கொடியை பறக்கவிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை இதுவரை 3 பேரை கைது செய்திருக்கிறது.
ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பை சேர்ந்த ஒருவர், மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த இருவர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு கோவையில் பயங்கரவாத அமைப்புகள் கார் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கசெய்தது. இதில் அதிர்ஷவசமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. காரில் இருந்த பயங்கரவாதி மட்டுமே உயிரிழந்தான். இந்த சம்பவம் நடந்த பின்னர் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பயங்கரவாத சம்பவத்திற்கு தொடர்புடையவர்களை கைது செய்து வருகிறது. இந்த நேரத்தில் மீண்டும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான கொடியை கோவையில் பறக்கவிடுவது அங்குள்ள இந்துக்களை அச்சமடைய செய்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்புகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விஷயத்தில் மாநில அரசை நம்புவது ஆபத்தானது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .