பெரும் முயற்சிக்கு பின்னர் செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் வைத்த மோடி மீண்டும் பாரதத்தின் பிரதமராக வருவார், என திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் கூறியுள்ளார்.
திண்டுக்கல், பழனி சாலையில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று (அக்டோபர் 25) மாலை திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரியர் சுவாமிகள் கோயிலுக்கு வந்தார். அங்கு பக்தர்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: சுதந்திரம் அடைந்தபோது திருவாவடுதுறை ஆதினத்திடம் இருந்து தான் செங்கோல் பெறப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சிக்கு பின் மீண்டும் நம்மிடம் செங்கோல் பெற்று புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அது பெருமையான விஷயம். செங்கோல் ஆட்சி மீண்டும் வந்துள்ளது. மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வருவார். இவ்வாறு அவர் கூறினார்.