சேலம் ‘கோட்டை மாரியம்மன்’ திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளதால், இந்து இயக்கங்களின் வலியுறுத்தலை ஏற்று, சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலத்தில் மிகவும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற திருத்தலமாக இருப்பது கோட்டை மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், கோவிலின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை (அக்டோபர் 27) மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு தற்போது ஏராளமான வைபவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் (அக்டோபர் 24) ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். (அக்டோபர் 25) அன்று கணபதி வழிபாடு, சிலைகளுக்கு கண் திறப்பு போன்ற வைபவங்கள் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதினால் சேலம் முழுவதும் தற்போது விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. கோவிலின் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றது. ஆ
ஆண்டு தோறும் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்று. காரணம், உள்ளூர் வெளியூர்களிலிருந்து லட்சக்ணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் அங்கு ஒன்றாக திரண்டு சுவாமி தரிசனம் பக்தர்களின் கூட்டம் அலை மோதும். மாவட்டமே விடுமுறை எடுத்துச் செல்லும் நிலையில், நிர்வாக சங்கடங்களை தவிர்ப்பதற்காக, உள்ளூர் விடுமுறை விடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை, இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, விடுமுறை அறிவிக்கப்படவில்லை. சனாதன எதிர்ப்பு அரசு இதிலும் தனது இந்து எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பியது.. ஆனால் இந்து இயக்கங்கள் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்து இயக்கங்கள் ஒன்று திரண்டு மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து, அவசியம் உள்ளூர் விடுமுறை விடப்பட வேண்டும் என கண்டிப்பாக வலியுறுத்தினார்.
இதனைப் புரிந்து கொண்ட மாவட்ட நிர்வாகம், நாளை அக்டோபர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இதற்கான உத்தரவை வெளியிட்டார்.