ரேசன் விநியோகத்தில் ஊழல்: மேற்குவங்கம் அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை!

மேற்கு வங்க மாநிலத்தில் ரேசன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததற்காக அமைச்சர் ‘ஜோதி ப்ரியா மல்லிக்’கை இன்று (அக்டோபர் 27) அதிகாலை கைது செய்தது அமலாக்கத்துறை. நேற்று காலை முதல் அவரது வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று காலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கி வரும் அரசு பல்வேறு ஊழல்களை செய்து வருகிறது. எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்ட பலரும் ஊழலில் திளைத்து வருகின்றனர்.

அந்த வகையில் அம்மாநிலத்தில் வனத்துறை அமைச்சராக ஜோதிப்ரியா மல்லிக் செயல்பட்டு வருகிறார். இவர் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய போது ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு செய்துள்ளார். இது பற்றி சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை.

அதன்படி வழக்கு தொடர்பாக நேற்று (அக்டோபர் 26) காலை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு சொந்தமான 2 வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். முன்னதாக ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு நெருக்கமான ஒருவரை அமலாக்கத்துறை ஏற்கனவே  கைது செய்திருந்தது.

தான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து,  “மிகப் பெரிய சதித் திட்டத்துக்கு பலிகடாவாக்க பட்டுள்ளேன்” என  அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு வேளை சதித்திட்டத்தை மம்தா பானர்ஜி செய்தாரோ என்று  கேள்வி எழுந்தது உள்ளது. ஊழல் வேட்டையில் இன்னும் பல அமைச்சர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top