‘ஹமாஸ்’ பயங்கரவாதி தலைவர் பேசிய அடுத்த நாளே கேரளா மதவழிபாட்டு தளத்தில் வெடிகுண்டு வெடிப்பு?

கேரளாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றினார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே கொச்சி அருகேயுள்ள களமசேரியில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 1 சிறுமி மற்றும் 2 பெண்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம், காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், கேரளாவில் செயல்படும் ஜமாத் இஸ்லாமி என்ற அமைப்பின் இளைஞர் அணி சார்பில் பேரணி நடந்தது. கேரளாவின் மலப்புரம் என்ற இடத்தில் நடந்த இந்த பேரணியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த காலீத் மாஷால் என்பவர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தோன்றி அரபி மொழியில் பேசினார்.

இதற்கு அம்மாநில பாஜக துணைத்தலைவர் கே.டி.ரெமா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கேரளாவில் நடந்த பேரணியில் ஹமாஸ் தலைவர் பேசியது அதிர்ச்சியை அளிக்கிறது. பயங்கரவாத அமைப்பானது, மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் அதன் குணத்தை காட்டி உள்ளது. இஸ்ரேலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் நன்கு அறிந்து வைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மலப்புரத்தில் நடந்த பேரணியில் ஹமாஸ் பயங்கரவாத தலைவர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசியது அச்சமூட்டுகிறது. பினராயி விஜயனின் கேரள போலீஸ் எங்கே போனார்கள்? பாலஸ்தீனத்தை பாதுகாப்போம் என்ற பெயரில், பயங்கரவாத அமைப்பு புகழப்படுகிறது. அதன் தலைவர்களை தியாகிகள் என பாராட்டுகின்றனர். இதனை ஏற்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான், கேரளாவின் கொச்சி அருகேயுள்ள களமசேரியில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 1 சிறுமி மற்றும் 2 பெண்கள் என 3 பேர் உயிரிழந்தனர். 52-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த உடனே மத்திய உள்துறை அமைச்சர் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தொடர்பு கொண்டு நிலவரம் பற்றி கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்நிலையில் இருக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரயில் நிலையம், விமான நிலையங்கள், மக்கள் கூடுகின்ற இடங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு வழக்கில் ஒருவர் காவல் நிலையத்தில் சரண்:

களமச்சேரி வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கோடக்கரை காவல் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்துள்ளதாக கேரள மாநில ஏடிஜிபி அஜித் குமார் தெரிவித்துள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரளாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான காலீத் மாஷால் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசிய அடுத்த நாளே வெடிகுண்டு வெடித்ததால் இதற்கு அந்த இயக்கத்திற்கு தொடர்பு இருக்குமோ என்று எண்ணியிருந்தனர். ஆனால் டொமினிக் மார்டின் என்ற கிறிஸ்தவர் நான்தான் வெடிகுண்டை வைத்தேன் என்று காவல்துறையில் சரணடைந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் உண்மை குற்றவாளி யார் என்று கேரள மக்கள் முன்பு தெரிவிப்பது அரசின் கடமையாகும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top