ஹிந்து கோவில் ஓவியத்தில் கிறிஸ்துவ தேவதை: ஹிந்து அறநிலையத்துறையின் அவலம்!

கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் கோவிலில் கிறிஸ்தவ தேவதை படம் வரையப்பட்டு இருப்பதற்கு இந்து இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன..

இது தொடர்பாக இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் கூறியதாவது: 

தி.மு.க., ஆட்சியில் ஹிந்து அறநிலையத் துறை அலங்கோலத் துறையாக மாறி விட்டது என்பதற்கு சமீபத்திய உதாரணம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் வரையப்பட்டிருக்கும் படங்கள்.

திவ்ய தேசங்கள் 108ல் ஒன்றாகக் குறிப்பிடப்படும் திருகண்ணபுரம் கோவிலில் தற்போது புனரமைப்பு பணி நடக்கிறது. அதையொட்டி கோவில் மேற்கூரையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் புதுப்பிக்கின்றனர்.

ஹிந்து கோவில் அடையாளங்கள் பற்றி எதுவுமே தெரியாத ஓவியர் கிறிஸ்துவ ஏஞ்சல் ஓவியங்களை அங்கு வரைந்து உள்ளார். திருக்கண்ணபுரம் கோவில் மேற்கூரை ஓவியம் கிறிஸ்துவ தேவதையைப் போல இருப்பதால் அதை உடனடியாக சீர்படுத்த வேண்டும். அறநிலையத் துறை அதிகாரிகள் சரி செய்யவில்லை என்றால் இந்து இயக்கங்கள் இணைந்து போராட வேண்டி வரும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top