திருவண்ணாமலையில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 7 விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் விடியாத திமுக அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா பகுதியில் சிப்காட் அமைப்பற்காக விவசாயிகளின் நிலங்களை விடியாத திமுக அரசு கையகப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தில் 7 விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது திமுக அரசு. அதன்படி பச்சையப்பன், மாசிலாமணி, பாக்கியராஜ், சோழன், திருமால், அருள், தேவன் ஆகிய 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை போட்டுள்ளது.
விவசாயிகள் மீது அக்கறை இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்பதற்கு இந்த வழக்கு ஒன்றே போதும். சும்மா பெயரளவில் நானும் டெல்டா காரன் என்ற பொய்யை மக்கள் முன்பு சொல்லியிருந்தார். அவரின் போலியான குட்டு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டதை அறிந்த உடனே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு தேவையான சட்ட உதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாஜக துணை நிற்கும் எனவும் குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.