திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து இன்று (நவம்பர் 17) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா, கடந்த 13ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வருகிறது.
உச்சி கால அபிஷேகம் தீபாராதனையைத் தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 18) மாலை நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை தென்னகர ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை – திருநெல்வேலிக்கு இன்று (நவம்பர் 17) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, நாளை நண்பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருச்செந்தூர் முதல் தாம்பரம் வரையில் நாளை (நவம்பர்18) இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு, நவம்பர் 19 நண்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயிலை இயக்க முடிவெடுத்த தென்னக ரயில்வேக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால் திமுக அரசு பக்தர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் 2000 முதல் 3000 ரூபாய் வரை பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.