சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கண் சிகிச்சை நிபுணர் சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கண் சிகிச்சையில் அவர் ஆற்றிய பங்களிப்பும், சமூகத்திற்கான அவரது இடைவிடாத சேவையும் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.
அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.