திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் இன்று (நவம்பர் 21) விடியாத திமுக அரசின் அட்டூழியத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்கத்திற்கு 1,200 ஏக்கரை கையகப்படுத்த விடியாத திமுக அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். உடனடியாக குண்டர் சட்டத்தை ரத்து செய்து விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதே போன்று தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விவசாய சங்கங்கள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் பயந்து போன முதல்வர் ஸ்டாலின் 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் விலக்கி ஆணை பிறப்பித்தார்.
போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய அருள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை மட்டும் இன்னமும் விலக்கப்படவில்லை. அவர் மீதான குண்டர் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், ஏற்கனவே போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வரம்பு மீறி நடந்து கொண்ட ஆட்சியர், எஸ்.பி. மீது ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 24 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 21) மிகப்பெரிய அளவில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்காக 100க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து விவசாயிகள் போராட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தப் போராட்டக் குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அருள் என்ற விவசாயி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யவும், திருவண்ணாமலை சிப்காட் விரிவாக்கத்தை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.