திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதி சீட்டுக்கு கட்டணம்: இந்து அமைப்புகள் புகார்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்வேறு சிறப்புப் பூஜைகளுக்கு மத்தியில், வரும் 26-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதனை தரிசிக்க 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.

இந்த நிலையில், தீபத்திருவிழாவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்கான டிக்கெட் நாளை முதல் (நவம்பர் 24) விற்பனை செய்யப்படும் என்றும் காலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தைக் காண 500 ரூபாய் கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதி சீட்டும், மாலை 6 மணிக்கு மகா தீபத்தைக் காண 600 ரூபாய் கட்டணத்தில் 100 பேருக்கும், அதுபோல, 500 ரூபாய் கட்டணத்தில் 1,000 பேருக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படும் எனத் திருக்கோவில் நிர்வகாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் சட்டவிரோதமாக கொள்ளைப்புற வழியில் ரூ2,000 முதல் ரூ.3,000 வரை டிக்கட் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

திருக்கோவில் அறிவிப்புக்கு பல இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சுவாமியை தரிசனம் செய்யக் கட்டணம் பெறக்கூடாது, அனைவரும் சுவாமியை இலவசமாகவே தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னர் திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின்போது இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வரை கட்டணம் வசூல் செய்தனர். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தற்போது திருவண்ணாமலை கோவிலில் வசூல் வேட்டையில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top