உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் மிகப்பிரமாண்டமான முறையில் கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக கூடாரங்கள் அமைக்கும் பணிகளில் அம்மாநில அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
உத்தர பிரதேசம், அயோத்தியில் ராம ஜென்மபூமி தீர்த்த கேந்திரம் சார்பில் எழுப்பப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ராமர் கோவில் அருகே மஜ்ஹா குப்தர் காட், பாஹ் பிஜேஷி, பிரஹம்மகுந்த் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தங்கும் வகையில் 30,000 கூடாரங்களும், 35 பெரிய கூடாரங்களும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஹ் பிஜேஷி, மஜ்ஹா குப்தர் காட் ஆகிய பகுதிகளில் தலா 25,000 பேர் தங்குவதற்கான கூடாரங்கள் தயாராகி வருகிறது.
லட்சக்கணக்கான மக்களை, தங்க வைக்கும் பணியை மாநில அரசு மிகத் துல்லியமாக திட்டமிட்டு நடத்தி வருகிறது.