பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்து அசத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் ராணுவத்திற்கு தேவையான இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 25) பெங்களூரு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து தேஜஸ் போர் விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டார்.
இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில்;
தேஜஸ் விமானப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு இருந்தது. நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது, மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.