சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் ஒருநாள் கனமழைக்கே நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விடியாத திமுக அரசின் ரூ.4000 கோடி பேக்கேஜ் என்னாச்சு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 29) இரவு முதல் சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கொளத்தூர் அஞ்சல் நகர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
ராயப்பேட்டை சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.. சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.
வரும் டிசம்பர் 2, 3 தேதிகளில் வட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் மேக திரட்சி காரணமாக மிக்க கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் அனைத்தும் மூழ்கியுள்ளன. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டாலேயே உயிரை காவு வாங்கும் நிலையில் சென்னை மாநகரின் சாலை வசதிகள் உள்ளன. தற்போது பெய்துவரும் கனமழைக்கு இதுவரை மேற்கு மாம்பலம், தி.நகர் பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் வசதியை மேற்கொள்வதற்காக சென்னை பேக்கேஜ் ரூ.4000 கோடி ரூபாய் விடியாத திமுக அரசு ஒதுக்கி பணிகள் செய்த்தாக சென்னை மாநகராட்சி கூறியிருந்தது. ஆனால் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வடிகால் வசதி முறையாக இல்லாததால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து ஆறாக சாலைகளில் ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
அது மட்டுமின்றி முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் அங்குள்ள காவல்நிலையம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இனி வரும் மழையை நினைத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றே சொல்லலாம்!